பஞ்சாப் காவல்துறையில் ஒரே பதவியில் இருக்கும் தந்தை மகள்

காணொளிக் குறிப்பு, லவ்லீன் கவுர் மற்றும் அவரது தந்தை சம்கவுர் சிங் இருவரும் ஒரே பதவியில் பணியாற்றுகின்றனர்.
பஞ்சாப் காவல்துறையில் ஒரே பதவியில் இருக்கும் தந்தை மகள்

லவ்லீன் கவுர் மற்றும் அவரது தந்தை சம்கவுர் சிங் ஆகியோர் ஒரே பதவியில் பஞ்சாப் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ரெசல் கிராமத்தைச் சேர்ந்த லவ்லீன் கவுர் சமீபத்தில் சப்-இன்ஸ்பெக்டராக சேர்ந்தார், ஆனால் அவரது தந்தை சம்கவுர் சிங், கான்ஸ்டபிளாக இருந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற 27 ஆண்டுகளானது.

சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் தந்தை, மகள் இருவரும் ஒன்றாக வீட்டை விட்டு புறப்படுகின்றனர்.

தந்தை மகள்
படக்குறிப்பு, தனது குழந்தைகளும் பஞ்சாப் காவல்துறையில் சேர வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாகக் கூறுகிறார் சம்கவுர் சிங்.

தந்தைக்கு சரிசமமான பதவியில் அமர்ந்தாலும் தந்தையே எப்போதும் தன்னை விட சீனியராக இருப்பார் என்கிறார் லவ்லீன். பஞ்சாப் காவல்துறையில் தனது பணியைத் தொடங்கியதிலிருந்து, தனது குழந்தைகளும் பஞ்சாப் காவல்துறையில் சேர வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாகக் கூறுகிறார் சம்கவுர் சிங்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)