ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறும் யுக்ரேன்
யுக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது நாளாக மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை தொடர்கிறது. ஒரே இரவில் யுக்ரேன் மீது ரஷ்யா மேலும் ஒரு தொடர் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய விமானம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவது குறித்து செவ்வாய்கிழமை அதிகாலை யுக்ரேனிய அதிகாரிகள் வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளை வெளியிட்டனர். ரஷ்யா போர் விமானங்களைக் கொண்டு மட்டுமின்றி பெரிய அளவில் டிரோன்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதும் பதிவாகியுள்ளது.
இதனால், யுக்ரேனின் வான் பாதுகாப்புப் படைகள், அந்நாடு முழுவதும் ரஷ்யாவின் (Ballistic) பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
ஒட்டுமொத்த நாடும் பாலிஸ்ட்டிக் ஆயுத தாக்குதலில் அச்சத்தின் கீழ் இருப்பதாக யுக்ரேனிய வான்பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.
முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



