தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா?
சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது, சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று தண்ணீர் குடிப்பது பற்றி பல அறிவுரைகள் இருக்கின்றன.
தற்செயலாக நாம் சாப்பிடும்போது அல்லது சாப்பிட்டதற்கு முன்னர் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? அது செரிமானத்தை பாதிக்குமா? தண்ணீர் நம்ம உடலில் என்னென்ன செய்யும்?
தண்ணீர் மனது உடலிற்கு மிகவும் முக்கியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடலில் இருக்கும் செல்களுக்கு இந்த தண்ணீர் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குகின்றது. நமது சிறுநீரகத்தில் உள்ள பாக்டீரியா போன்ற கிருமிகளை வெளியேற்ற தண்ணீர் உதவுகின்றது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ளவும் இது உதவுகின்றது.
நமது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும், எலட்ரோலைட்களின் சமநிலையை பாராமரிக்கவும், செரிமானத்துக்கு உதவவும், மலச்சிக்கலை தடுக்கவும் தண்ணீர் அருந்துவது உதவுகின்றது.
எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும், உணவு உண்ணும்போது தண்ணீர் பருகலாமா கூடாதா? அவ்வாறு செய்தால் செரிமானத்தில் பாதிப்பு ஏற்படுமா?
இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகளை தெரிந்துகொள்ள மேலுள்ள காணொளியை பாருங்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



