காணொளி: 5-வது மாடியில் இருந்து பனியில் குதித்த நபர்
காணொளி: 5-வது மாடியில் இருந்து பனியில் குதித்த நபர்
ரஷ்யாவில் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்த இந்த நபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
காரணம், பனி.
வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக ரஷ்யாவின் கிழக்குப் பகுதியான கம்சட்காவில் நகரங்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளன.
சிலர், முழுமையாக பனிக்குள் புதைந்த தங்களது வாகனங்களை தோண்டி எடுத்தனர்.
சிலர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல பனியை தோண்டி வழியை ஏற்படுத்தி செல்லவேண்டியுள்ளது.
மேலும் சிலர் வீட்டிற்குள்ளேயே சிக்கியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



