காணொளி - சிங்களக் குடியேற்றங்களுக்கான திட்டமா 'கிவுல் ஓயா'?
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமையவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை எதிர்த்துத் தமிழர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2011-ல் திட்டமிடப்பட்டு, தற்போது தேசிய மக்கள் சக்தி அரசால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், அப்பகுதியிலுள்ள சிங்களக் குடியேற்றங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், புதிய குடியேற்றங்கள் மூலம் இனப்பரம்பலை மாற்றவும் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பாரம்பரியத் தமிழ் நிலங்களை வனப்பகுதி எனக் கூறி வழங்க மறுக்கும் அரசு, இத்திட்டத்திற்காக மட்டும் காடுகளை விடுவிப்பதையும், இது யானை - மனித மோதலை அதிகரிக்கும் என்பதையும் எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், இத்திட்டத்தில் இன உள்நோக்கம் ஏதுமில்லை என்றும், விவசாய மேம்பாட்டிற்காகவே இது செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



