கிரீஸில் ஈஸ்டர் தினத்தன்று இரு தேவாலயங்கள் இடையே ராக்கெட் போர்

காணொளிக் குறிப்பு, கிரேக்கம்: ஈஸ்டர் தினத்தின்போது இரு தேவாலயங்கள் இடையே நடந்த ராக்கெட் போர்
கிரீஸில் ஈஸ்டர் தினத்தன்று இரு தேவாலயங்கள் இடையே ராக்கெட் போர்

பார்ப்பதற்கு ஏதோ போர்க்களம் போல காட்சியளிக்கும் இது உண்மையான போர்க்களம் இல்லை.

இது 'rouketopolemos'. கிரேக்க தீவான சியோஸில் உள்ள வ்ரோன்டாடோஸ் நகரில் ஒவ்வொரு ஈஸ்டர் தினத்தின்போதும் இரண்டு எதிரெதிர் துருவ தேவாலயங்கள் ராக்கெட் போரில் ஈடுபடுகின்றன.

எதிரில் உள்ள தேவாலயத்தின் மணியை அடிப்பது யார் என்பதில் தான் இரு தரப்புக்கும் போட்டியே. இதில் அதிகளவிலான தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தும் கிராமத்தினர் வெல்வார்கள்.

உள்ளூரில் இந்த போட்டிக்கு கலவையான எதிர்வினைகள் வருகின்றன. சிலர் தமது உடைமைகளை பாதுகாக்க உலோக தடுப்புகளை அமைக்கிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.