காணொளி: மெக்சிகோவில் எல் மெஞ்சோ கொல்லப்பட்டதால் பதற்றம்

காணொளிக் குறிப்பு, எல் மெஞ்சோ கொலையால் மெக்சிகோவில் பதற்றம்
காணொளி: மெக்சிகோவில் எல் மெஞ்சோ கொல்லப்பட்டதால் பதற்றம்

மெக்சிகோவில் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) போதைப்பொருள் கும்பலின் தலைவரான ‘எல் மெஞ்சோ’, கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"எல் மெஞ்சோ" என்று அழைக்கப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ், அவரது ஆதரவாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் பலத்த காயம் அடைந்தார். தலைநகர் மெக்சிகோவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்தார்.

‘எல் மெஞ்சோ’ உயிரிழப்புக்கு எதிர்வினையாக, கார்களை தீ வைத்து எரித்தல், சாலையில் தடைகளை ஏற்படுத்துதல் மற்றும் எட்டு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரைத் தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் அந்த போதைப்பொருள் கும்பல் ஈடுபட்டது. மக்களை "அமைதி காக்குமாறு” மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் பார்டோ கேட்டுக் கொண்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு