காணொளி: ஒற்றை பாறையில் செதுக்கப்பட்ட 108 அடி விஷ்ணு சிலை

காணொளிக் குறிப்பு, ஒற்றை பாறையில் 108 அடி விஷ்ணு சிலை
காணொளி: ஒற்றை பாறையில் செதுக்கப்பட்ட 108 அடி விஷ்ணு சிலை

மிகப்பெரிய இந்த விஷ்ணு சிலை பெங்களூருவில் அமைந்துள்ளது. இது சுமார் 108 அடி உயரத்துக்கு ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்ட சிலை. 16 கைகள் மற்றும் 11 தலைகளைக் கொண்ட இந்த மாபெரும் சிலை எஜிபுராவில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இதற்காக 600 டன் எடை கொண்ட பாறை, திருவண்ணாமலைக்கு அருகே உள்ள கொருக்குட்டை கிராமத்திலிருந்து பெங்களூருவுக்கு சுமார் 350 கி.மீ தூரம் கடந்து கொண்டு செல்லப்பட்டது.

இந்த சிலையை வடிக்கும் பணி 2010ல் தொடங்கி, 2025ல் நிறைவடைந்துள்ளது.

டாக்டர் சதானந்தா, சிறப்பு முயற்சி எடுத்து சிலையின் வடிவமைப்பில் கவனம் செலுத்தி, இந்து முறைப்படி அது செதுக்கப்படுவதை உறுதி செய்தார். சிலையின் மதிப்பை இதுவரை கணக்கிடவில்லை என்கிறார் சதானந்தா.

உலகிலேயே இதுதான் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய விஷ்ணு சிலை என டாக்டர் சதானந்தா கூறுகிறார். எனினும் பிபிசி சுயாதீனமாக இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு