2 நாளில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்... தாராவி தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, தாராவி தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?
2 நாளில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்... தாராவி தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?

மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு வரும் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி (MAVIA) கூட்டணியில் களம் காண்கின்றன.

மறுபுறம், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணியில் தேர்தலை சந்திக்கின்றன.

ஆசியாவின் மிக பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் தாராவி, மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் குறித்து தாராவியில் வசிக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)