சென்னை அருகே டேங்கர் ரயிலில் தீ விபத்து - ரயில் சேவை பாதிப்பு

காணொளிக் குறிப்பு, டேங்கர் ரயில் விபத்து - ரயில் சேவை பாதிப்பு
சென்னை அருகே டேங்கர் ரயிலில் தீ விபத்து - ரயில் சேவை பாதிப்பு

சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் இன்று காலை தீ பிடித்தது. இதில் ஆறு பெட்டிகள் கொழுந்து விட்டு எரிந்தன.

ரயிலில் 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே கூறுகிறது. சுமார் 7 மணி போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இதனால் புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை செண்ட்ரலில் இருந்து அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர் வழியாக அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

அதே போல் சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் சென்னையை நோக்கி வரும் விரைவு ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு