பாலத்தீனத்தை தனி நாடாக சில நாடுகள் அங்கீகரிக்க மறுப்பது ஏன்?
பாலத்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் அறிவித்தார். இதன் மூலம் பாலத்தீனத்தை அங்கீகரிக்கும் முதல் G7 நாடாக பிரான்ஸ் உள்ளது.
செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபையில் நடைபெறும் நிகழ்வில் இது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் கூறினார். மேலும், உடனடி சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாலத்தீன தலைவர்கள் மக்ரோங்கின் முடிவை வரவேற்ற நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இதனைக் கடுமையாகக் கண்டித்தார்.
அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பரிசளிப்பதாக இது இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதை இஸ்ரேல் ஏற்றுகொள்ள மறுத்து வருகிறது. தற்போதைய இஸ்ரேல் அரசு, கேற்குக் கரை மற்றும் காஸாவில் ஒரு பாலத்தீன நாடு உருவாக்கப்படுவதற்கு எதிராக உள்ளது. அவ்வாறு ஒரு நாடு உருவாக்கப்பட்டால் அது இஸ்ரேலின் இருப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் என இஸ்ரேலிய அரசு வாதிட்டு வருகிறது.
அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த முடிவை "கவனக்குறைவானது" என விமர்சித்தார்.
பாலத்தீனத்தை நாடாக இதுவரை அங்கீகரித்தவை எவை? அதனை நாடாக அங்கீகரிக்க சில நாடுகள் மறுப்பது ஏன்?
முழு விவரம் காணொளியில்



