காணொளி: வாடிக்கையாளர் போல நடித்து கிரிக்கெட் பேட் திருட்டு
காணொளி: வாடிக்கையாளர் போல நடித்து கிரிக்கெட் பேட் திருட்டு
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயலில் உள்ள கடையில் இருந்து ஒருவர் கிரிக்கெட் பேட்டை திருடிச் செல்லும் காட்சி இது.
ஹெல்மெட் அணிந்துள்ள இவர், இரண்டு பேட்டுகளை திருடிக்கொண்டு ஓடினார். கடைக்காரர் இவரை துரத்திச் சென்ற நிலையில், ஒரு பேட்டை அங்கேயே விட்டுவிட்டு பைக்கில் தப்பினார். கடைக்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



