குழந்தையின் காயத்திற்கு ஃபெவிக்விக் பயன்படுத்திய மருத்துவர்கள் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
குழந்தையின் காயத்திற்கு ஃபெவிக்விக் பயன்படுத்திய மருத்துவர்கள் - என்ன நடந்தது?

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில், இரண்டரை வயது குழந்தை ஒன்று நெற்றியில் ஏற்பட்ட காயம் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.

நவம்பர் 20ஆம் தேதி இரவு, அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்பதால், ஊழியர்கள் குழந்தையின் காயத்தில் ஃபெவிக்விக் என்ற பசையைப் பயன்படுத்தியதாக அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் குழந்தை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காயம் சுத்தம் செய்யப்பட்டு நான்கு தையல்கள் போடப்பட்டதாகவும் பிடிஐ குறிப்பிட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு