கானல் நீராகும் ஆப்கன் சிறுமிகளின் கல்வி - ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என்ற விதி உள்ளது.
கானல் நீராகும் ஆப்கன் சிறுமிகளின் கல்வி - ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை

கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆப்கானிஸ்தானில் பல விதமான சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர் தாலிபன்கள்.

அதில் முக்கியமானது பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என்ற உத்தரவு. அது மட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதம் உயர்கல்வி வரை படித்து வந்த பெண்களையும் கல்வி வளாகங்களில் இருந்து வெளியேற்றியுள்ளது தாலிபன் அரசு.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது ஆறாம் வகுப்பில் படித்து வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பலரின் ஆசைகள் கனவுகளாகவே மாறும் சூழல் நிலவுகிறது.

உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கல்விக்கு கட்டுப்பாடுகள் கொண்டுள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே. பெண்களுக்கு எதிரான கல்வி உரிமையை அந்த நாடு தளர்த்தினால் மட்டுமே அந்த நாட்டை அங்கீகரிக்க முடியும் என்று சர்வதேச சமூகம் கூறியுள்ளது.

கானல் நீராகும் ஆப்கான் சிறுமிகளின் கல்வி
படக்குறிப்பு, கல்வித்தடையால் தங்கள் கனவு கலைந்து விட்டதாக கூறும் ஆப்கன் சிறுமிகள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)