'என்ன நடந்தாலும் இனி பாலத்தீனத்தில் தான் இருப்போம்' - காஸாவுக்குள் நுழைய காத்திருக்கும் மக்கள்
'என்ன நடந்தாலும் இனி பாலத்தீனத்தில் தான் இருப்போம்' - காஸாவுக்குள் நுழைய காத்திருக்கும் மக்கள்
எகிப்து - காஸா இடையிலான ரஃபா கடவுப்பாதை அருகே பத்துக்கும் மேற்பட்ட பாலத்தீன குடும்பங்கள் கூடியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், ரஃபா கடவுப் பாதை வழியாக காஸாவுக்குள் சென்றுவிடலாம் என அவர்கள் நம்புகின்றனர்.
சுமார் ஏழு வாரங்களுக்கு முன்பு இந்த மோதல் தொடங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் முதல்முறையாக இங்கு வருகின்றனர். தங்கள் குடும்பங்களுடன் சென்று சேர்வதற்காக அவர்கள் காஸாவுக்கு செல்லக் காத்திருக்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



