அதானியால் பழவேற்காடு ஏரி பேரழிவை சந்திக்குமா? மீனவர்கள் அஞ்சுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, தற்போது 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி நிறுவனம் 6,110 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதானியால் பழவேற்காடு ஏரி பேரழிவை சந்திக்குமா? மீனவர்கள் அஞ்சுவது ஏன்?

சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது எல்&டி துறைமுகம். தற்போது 330 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தத் துறைமுகத்தை 6,110 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை அதானி நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

இந்தத் திட்டம், ஏற்கெனவே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் கடலோரப் பகுதிகளை பேரழிவில் தள்ளும் என்று பழவேற்காடு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதுகுறித்த பிபிசியின் கள ஆய்வு.

தயாரிப்பு: க. சுபகுணம்

ஒளிப்பதிவு: ஜெரின் சாமுவேல் & சாம் நிஷாந்த்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)