ஜி20 மாநாட்டை அலங்கரித்த தமிழ்நாட்டு நடராஜர் சிலை - யார் செய்தது தெரியுமா?

காணொளிக் குறிப்பு, ஜி20 மாநாட்டை அலங்கரித்த தமிழ்நாட்டு நடராஜர் சிலை - யார் செய்தது தெரியுமா?
ஜி20 மாநாட்டை அலங்கரித்த தமிழ்நாட்டு நடராஜர் சிலை - யார் செய்தது தெரியுமா?

புதுடெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதில் தமிழ்நாட்டின் பங்கும் உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் வடித்த 27 அடி உயர நடராஜர் சிலை ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. அஷ்ட தாது எனப்படும் எட்டு உலோகங்களால், காவிரி ஆற்றின் வண்டல் மண் கொண்டு செதுக்கப்பட்டிருப்பது இந்தச் சிலையின் சிறப்பு.

சோழர் காலத்தில் தஞ்சாவூர் பெரிய கோவில் நடராஜர் சிலை வடித்த குடும்பத்தினர், இதை வடித்துள்ளனர் என்பது மற்றொரு சிறப்பு அம்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களால் செதுக்கப்பட்ட நடனமாடும் நடராஜர் சிலை ஜி20 மாநாட்டில், 'பாரத் மண்டபம்’ என்றழைக்கப்படக்கூடிய அரங்கின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: