பிச்சைக்காரன் - 2 படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - சினிமா விமர்சனம்

காணொளிக் குறிப்பு, பிச்சைக்காரன் - 2 படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - சினிமா விமர்சனம்
பிச்சைக்காரன் - 2 படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - சினிமா விமர்சனம்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்- 2’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டிருக்கிறார்.

காவ்யா தாப்பர், தேவ் கில், ஹரீஷ் பேரடி, ஜான் விஜய் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பிச்சைக்காரன்- 2’ படப்பிடிப்பில்தான் விஜய் ஆண்டனிக்கு பெரும் விபத்து ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார்.

அதன்பிறகு குணமடைந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதுபோன்ற காரணங்களால், விஜய் ஆண்டனி தனது முதல் படத்தை எப்படி இயக்கியிருப்பார் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

பிச்சைக்காரன் - 2

பட மூலாதாரம், @VIJAYANTONY

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: