"என் அக்கா மாதிரி" - முதலையிடம் பாசம் காட்டும் இளைஞர்

காணொளிக் குறிப்பு, முதலையை சொந்தம் பாராட்டும் ஜெர்மன் இளைஞர்
"என் அக்கா மாதிரி" - முதலையிடம் பாசம் காட்டும் இளைஞர்

சுமார் எட்டு அடி நீளம் கொண்ட இந்த முதலையை இந்த இளைஞர் தனது அக்கா என குறிப்பிடுகிறார்.

ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் சர்கஸ் கலைஞர் கிறிஸ்டியன் காலிஸ் தனது சிறுவயதில் இருந்து இந்த முதலையுடன் பழகி வருவதாக கூறுகிறார்.

சர்க்கஸ் கலைஞரான கிறிஸ்டியன் காலிஸ்-ன் தந்தை இந்த முதலையை இரண்டு வயதாக இருக்கும்போது வாங்கி சர்க்கஸில் பயன்படுத்தியுள்ளார்.

Frau Mayer எனும் இந்த முதலையின் அருகே படுத்துக்கொண்டுதான் சிறுவயதில் தனது Home Work-ஐ கூட செய்வேன் என கிறிஸ்டியன் கூறுகிறார். இந்த முதலை தனக்கு ஒரு அக்கா போல என்று கூறும் கிறிஸ்டியன், அதன் தனிப்பட்ட எல்லைகளை தாண்டி நான் எதுவும் செய்ய மாட்டேன். அதனால் நாங்கள் இருவரும் இத்தனை ஆண்டுகளாக நெருக்கமாக உள்ளோம் என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு