மழை நீரில் மூழ்கிய பிரயாக்ராஜ் நகரின் ட்ரோன் காட்சிகள்

காணொளிக் குறிப்பு, மழை நீரில் மூழ்கிய பிரயாக்ராஜ் நகரின் ட்ரோன் காட்சிகள்
மழை நீரில் மூழ்கிய பிரயாக்ராஜ் நகரின் ட்ரோன் காட்சிகள்

இந்த வாரத்தின் தொடக்கத்தில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் படகுகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

பல பகுதிகளில் நதிகள் கரைபுரண்டு வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

இந்த வீடியோ ஆகஸ்ட் 5ஆம் தேதி படமாக்கப்பட்டது. அதற்குப் பிறகு நீர்மட்டம் குறைந்தாலும், சில பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு