காணொளி: 'ரூ.14 கோடி நன்கொடை' - போன்டை துப்பாக்கிச் சூட்டில் துணிச்சலாக செயல்பட்டவருக்கு பரிசு
காணொளி: 'ரூ.14 கோடி நன்கொடை' - போன்டை துப்பாக்கிச் சூட்டில் துணிச்சலாக செயல்பட்டவருக்கு பரிசு
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் நடந்த தாக்குதலின் போது தூப்பாக்கிச்சூடு நடத்தியவரின் துப்பாக்கியை அகமது அல் அகமது துணிச்சலாகப் பிடுங்கினார். அப்போது பல முறை சுடப்பட்டார்.
இதனால் இவர் தனது ஒரு கையை இழக்கும் ஆபத்து உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அகமதுக்கு திரள்நிதி மூலமாக 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



