காணொளி: கரடிக்கு கூல் டிரிங்ஸ் கொடுத்த இளைஞர் மீது நடவடிக்கை ஏன்?

காணொளிக் குறிப்பு, கரடிக்கு கூல் டிரிங்ஸ் கொடுத்த இளைஞர்
காணொளி: கரடிக்கு கூல் டிரிங்ஸ் கொடுத்த இளைஞர் மீது நடவடிக்கை ஏன்?

சத்தீஸ்கரில் கரடி ஒன்றுக்கு இளைஞர் ஒருவர் குளிர்பானம் கொடுத்த காட்சி இது.

மஹாசுமுன்ட் மாவட்டம் மாதா சந்தி கோயில் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்தது.

அதன் பிறகு கரடி குளிர்பானம் குடிப்பதை அந்த இளைஞர் காணொளியாக பதிவு செய்தார்.

இந்த காணொளி வைரலானதை அடுத்து அந்த இளைஞர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வது குற்றம் என்பது தனக்கு தெரியாது என அந்த இளைஞர் கூறினார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு