குஜராத்தில் பணத்திற்கு பதிலாக தங்கம் வரும் ஏடிஎம் இயந்திரம்

காணொளிக் குறிப்பு,
குஜராத்தில் பணத்திற்கு பதிலாக தங்கம் வரும் ஏடிஎம் இயந்திரம்

தங்கம் மற்றும் வெள்ளிக்கான ஏடிஎம் ஒன்று குஜராத் மாநிலத்தின் சூரத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வருவது போல இந்த ஏஎடிஎம்-இல் தங்கமும் வெள்ளியும் வரும்.

இந்த ஏடிஎம் 24 மணிநேரமும் திறந்திருக்கும். டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் அல்லது யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் தங்கம் மற்றும் வெள்ளி காயின்கள் இந்த இயந்திரத்தில் இருந்து வரும்.

தங்கம்... அரை கிராம், ஒரு கிராம், இரண்டு கிராம், ஐந்து கிராம் மற்றும் இருபது கிராம் போன்ற அளவுகளில் வரும்.

வெள்ளிக்கு ஐந்து கிராம், பத்து கிராம் மற்றும் இருபது கிராம் ஆகிய அளவுகளில் வரும்.

அதே போல பணத்தை ரொக்கமாகச் செலுத்தி தங்கம் மற்றும் வெள்ளியை எடுக்கும் வசதி இந்த ஏடிஎம்-இல் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு