டொனால்ட் டிரம்ப் வெற்றி: அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் கூறுவது என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடி பெயர்ந்தவர்களை வெளியேற்றும் பணியை தீவிரமாக மேற்கொள்வேன் என்று அவர் தேர்தல் பரப்புரையில் கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில் பல லட்சம் இந்தியர்கள் சட்டப்பூர்வமாக குடியேறியும் க்ரீன் கார்டுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் அமெரிக்கவாழ் தமிழர்கள் பலரிடம் பேசியபோது, கமலா ஹாரிஸுக்கு ஆதரவான மனநிலையில் இருந்ததை காண முடிந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை டிரம்ப் கைப்பற்றியிருப்பது குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
இந்தத் தேர்தலில் ‘நாட்டின் பொருளாதாரம் மற்றும் குடியேற்றப் பிரச்னையை’ முன்னிறுத்தியே டிரம்ப் பரப்புரை செய்தார். அப்படியிருக்க குடியேற்றக் கொள்கைகளில் அவர் கொண்டுவரப்போகும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கருத்து என்ன? டொனால்ட் டிரம்பின் இந்த திட்டம் அவர்களை அச்சமடைய வைத்துள்ளதா?
சட்டப்பூர்வமாக குடியேறியவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவது தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் என்ன? விளக்குகிறது இந்த வீடியோ!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



