காணொளி: தென்னை மரத்தில் மோதி தலைகீழாக நின்ற கார்
காணொளி: தென்னை மரத்தில் மோதி தலைகீழாக நின்ற கார்
இலங்கையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளான காட்சி இது.
தென்னை மரத்தில் மோதிய காரின் பின்புறம், தென்னை மரத்தின் மேல் பகுதியை நோக்கி இருந்தது. அம்பலன்கொடை - கொடகம பகுதியில் ஜனவரி ஒன்றாம் தேதியான இன்று காலை இந்த விபத்து நடந்தது.
சாலையை கடக்க முயற்சி செய்தவர மீது மோதாமல் இருக்க முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் காரின் ஓட்டுநர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கிறனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அம்பலன்கொடை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



