இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் என்ன?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத உச்சமாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்த மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும், தேவைப்படும் இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி கொரோனா மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது..
JN 1 வகை திரிபை கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய திரிபு குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் அதே நேரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



