நாட்டையே உலுக்கிய டெல்லி கலவரம் - 5 ஆண்டுகள் கழித்தும் தொடரும் நீதிப் போராட்டம்

காணொளிக் குறிப்பு,
நாட்டையே உலுக்கிய டெல்லி கலவரம் - 5 ஆண்டுகள் கழித்தும் தொடரும் நீதிப் போராட்டம்

டெல்லியின் '2020 வகுப்புவாத கலவரங்கள்' அரங்கேறி, 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தக் கலவரங்கள் தொடர்பாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிபிசி நடத்திய ஆய்வில், அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள், இந்தியாவின் தலைநகரம் கண்ட மோசமான கலவரங்களில் ஒன்று. 2020 பிப்ரவரியில் நான்கு நாட்கள் நீடித்த வன்முறையில் 40 முஸ்லிம்கள் மற்றும் 13 இந்துக்கள் உட்பட 53 பேர் கொல்லப்பட்டனர்.

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர் தலைவர்களான உமர் காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் 16 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஒரு மாத காலம் நடந்த பெரும் போராட்டங்களின் பின்னணியில், இந்தக் கலவரத்தை அவர்கள் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், பல கடைகள் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டன. கலவரம் தொடர்பாக போலீசார் 758 வழக்குகளைப் பதிவு செய்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.

தற்போது இந்த வழக்கின் நிலை என்ன?

கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)