'தாக்குதல்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் தொடரும்' - நெதன்யாகு எச்சரிக்கை
இஸ்ரேல் இன்று 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை மூலம் இரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்ரேலின் தற்காப்புக்காக இது மேற்கொள்ளப்படுகிறது என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
"இஸ்ரேல் சில நிமிடங்களுக்கு முன் 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை மூலம் இரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்ரேலின் தற்காப்புக்காக இது மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கை ஆபத்தை முற்றிலும் நீக்கும் வரை, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும். பல தசாப்தங்களாக, டெஹ்ரானின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இஸ்ரேலை அழிக்க வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளனர். இதனை அணுஆயுதங்களை உருவாக்கும் திட்டத்தின் மூலம் செயல்படுத்த முயல்கின்றனர்.
9 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கடந்த சில ஆண்டுகளில் இரான் தயாரித்துள்ளது. சமீபத்திய மாதங்களில், இரான் இதுவரை இல்லாதவாறு செயல்படுகிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஆயுதமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதைத் தடுக்கவில்லை என்றால், இரான் மிகக் குறைந்த காலத்திற்குள், சில மாதங்களில் கூட அணுஆயுதத்தை தயாரிக்கும் நிலைக்கு வந்துவிடும். இது இஸ்ரேலின் இருப்புக்கே மிகப்பெரிய பேராபத்து." என்று அவர் கூறியுள்ளார்.
இரான் மீது திடீர் தாக்குதல் நடத்தக் காரணம் என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



