காணொளி: பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் ஜென் Z தபால் நிலையம்
சண்டிகரில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உள்ள தபால் நிலையத்தில் சில வித்தியாசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இது ஜென் Z தலைமுறையினரை தபால் நிலையங்களை நோக்கி ஈர்ப்பதை நோக்கமாக கொண்டது.
இந்த தபால் நிலையத்தில் நவீன மற்றும் தொலைநோக்குப் பார்வை அடிப்படையிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நவீன உள்கட்டமைப்புகள், வைஃபை இணைய வசதி, கியூஆர் அடிப்படையிலான டிஜிட்டல் தளம், பொழுதுபோக்கு இடங்கள், புத்தகங்கள், மாணவர்களுக்கான சலுகைகள் மற்றும் சில விளையாட்டுகளும் இதில் அடங்கும்.
“பழைய உள்கட்டமைப்பு வசதிகளுடன் தபால் நிலையம் பழையதாக இருந்தது. இப்போது புதிய வசதிகளுடன் சிறப்பாக உள்ளது.” என மாணவர் கரண் கூறுகிறார்.
“அமர்வதற்கான சோபா, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி போன்ற புதிய வசதிகளை நாங்கள் சேர்த்துள்ளோம். உள்ளரங்க விளையாட்டுகளும் உள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இதுபோன்ற தபால் நிலையங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். பிஜிஐ சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இதேபோன்ற மற்றொரு தபால் நிலையம் அமையும். பஞ்சாபில் இதுவே முதல் முறை. புதிய தலைமுறை எல்லாவற்றையும் விரைவாக எதிர்பார்க்கிறது, எனவே கியூஆர் குறியீடு மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். முன்பு பணமாக மட்டுமே பெற்று வந்தோம். இளைஞர்கள் இதை விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என துணை போஸ்ட் மாஸ்டர் ஜகத் சிங் கூறுகிறார்.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள தபால் நிலையங்கள் ஜென் Z தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



