காணொளி: யுக்ரேன் தலைநகர் கீயவை தாக்கிய ரஷ்ய டிரோன்கள்
காணொளி: யுக்ரேன் தலைநகர் கீயவை தாக்கிய ரஷ்ய டிரோன்கள்
யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்பை ஃப்ளோரிடாவில் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ள நிலையில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.
3 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போருக்கு முடிவு காண்பது குறித்து இருவர் சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இந்த தாக்குதல், மாஸ்கோ அமைதியை விரும்பவில்லை என்பதற்கான ஆதாரம் என்று யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.
கீயவ் மீது 10 மணி நேரம் நீடித்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும் 32 பேர் காயமடைந்ததாகவும் யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



