மகாராஷ்டிராவில் ரீல்ஸ் எடுக்க முயன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

காணொளிக் குறிப்பு,
மகாராஷ்டிராவில் ரீல்ஸ் எடுக்க முயன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

மகாராஷ்டிராவின் சடாரா மாவட்டத்தில் சடவாகாபூர் என்ற இடத்தில் கார் ஒன்று ரீல்களுக்காக சாகசம் செய்யும் போது சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த விபத்தில் சாயில் அனில் ஜாதவ் என்ற 20 வயதுடைய இளைஞர் காயமடைந்தார். அவருக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சாயில் சாகசம் செய்கிறபோது, அவரது நண்பர் அந்தக் காட்சியை மொபைல் போனில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் விழுந்தது. இதைக் கண்டதும் வீடியோ எடுத்து கொண்டிருந்த நண்பர் அலறி, உடனே பள்ளத்தாக்கை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் கார் கீழே விழுந்து விட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு