காணொளி: திடீரென விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம் - தவெக மாநாட்டு திடலில் பரபரப்பு

காணொளிக் குறிப்பு, மதுரை பாரபத்தியில் நாளை தவெகவின் 2வது மாநாடு நடைபெற உள்ளது.
காணொளி: திடீரென விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம் - தவெக மாநாட்டு திடலில் பரபரப்பு

மதுரை தவெக மாநாட்டு திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

மதுரை பாரபத்தியில் நாளை தவெகவின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதில் இக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 20) மாநாட்டு திடலில் வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சாய்ந்து அங்கிருந்த கார் மீது விழுந்தது. அந்த கார் முற்றிலுமாக சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தற்போது இந்த கொடுக் கம்பத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை நடைபெறும் மாநாட்டில், விஜய் இந்த 100 அடி கம்பத்தில் தவெக கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு