‘மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்’- செங்கோட்டையன் பேச்சு
அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவருமான செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்திருக்கிறார். நவம்பர் 27 ஆம் தேதி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் முன்பாக அக்கட்சியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “விஜய்க்கு எவ்வளவு தடைகள் வந்தாலும், மக்கள் சக்தியின் மூலமாக 2026இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. அது மக்கள் சக்தியாக மாறி இருக்கிறது.” என்று கூறினார்.
மேலும், “மக்கள் சக்தி மூலமாக, தமிழ்நாட்டில் புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு, நேர்மையான ஆட்சி உருவாக்குவதற்கு, புனிதமான ஆட்சியை உருவாக்குவதற்கு விஜய் புறப்பட்டிருக்கிறார். அவர் 2026-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்வார்.” என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



