காணொளி: லண்டனில் அதிக கவனம் பெற்ற சுமோ கிராண்ட் போட்டி
காணொளி: லண்டனில் அதிக கவனம் பெற்ற சுமோ கிராண்ட் போட்டி
வரலாற்றில் இரண்டாவது முறையாக சுமோ கிராண்ட் போட்டி ஜப்பானுக்கு வெளியே நடந்தது.
ஆம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் உள்ள ராயல் ஆர்பர்ட் ஹாலுக்கு சுமோ வீரர்கள் மீண்டும் வருகை தந்தனர். சுமோ விளையாட்டு 1000 ஆண்டுகள் பழமையானது.
'ரிகிஷி' (rikishi) என அழைக்கப்படும் வீரர்கள், தொயோ(dohyo) என்ற உயர்ந்த வட்ட வடிவ மேடையில் போட்டியிடுவார்கள். இந்த முறை 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு உணவு தயார் செய்ய தனியாக ஒருவரை போட்டி ஏற்பாட்டாளர்கள் நியமித்துள்ளனர். போட்டியாளர்கள் தினமும் 70 கிலோ அரிசி உணவு எடுத்துக் கொள்வதாகவும், மொத்த விற்பனையாளரிடம் நூடுல்ஸ் தீர்ந்துவிட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



