காணொளி: புடாபெஸ்ட் வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட 'சான்டா கிளாஸ்'

காணொளிக் குறிப்பு, காணொளி: புடாபெஸ்ட் நகரத்தின் தெருக்களில் குவிந்த ஆயிரக்கணக்கான சான்டா கிளாஸ்கள்
காணொளி: புடாபெஸ்ட் வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட 'சான்டா கிளாஸ்'

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரத்தில் கடந்த 7ஆம் தேதியன்று நடந்த ஓட்டத்தில், சான்டா கிளாஸ் போல் உடையணிந்து 4,500 பேர் பங்கேற்றனர். அனைத்து வயதினரும் டானுபே நதியருகில் ஒடினார்கள்.

குளிர்காலங்களில் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், பண்டிகை கால உணர்வை ஏற்படுத்தவும் இது நடத்தப்படுகிறது.

“இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. குடும்பத்தில் உள்ள அனைவரும் இங்கு வந்துள்ளோம். குழந்தைகளுடன் ஓடும் போது, அவர்களும் மகிழ்ந்தனர். இது அனைவரும் சேர்ந்து செய்வது. இதனை ஒன்றாக அனுபவிப்பது மிகவும் அருமையாக உள்ளது.” என்கிறார் இந்த சான்டா ஒட்டத்தின் பங்கேற்பாளர் ஜுலியா ஜேகப்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு