குடியேற்ற அதிகாரிகள் சோதனையால் கலிஃபோர்னியாவில் மோதல்
குடியேற்ற அதிகாரிகள் சோதனையால் கலிஃபோர்னியாவில் மோதல்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் விவசாய பண்ணையில் குடியேற்ற அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து டஜன் கணக்கானோர் கூடினர். சிலர் அதிகாரிகளின் வாகனங்களை மறித்தனர்.
சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களைக் கலைத்தனர்.
தெற்கு கலிஃபோர்னியாவில் குடியேற்ற சோதனைகளில் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த சோதனை நடந்திருக்கிறது. எனினும், விவசாய பண்ணைகளில் நடைபெறும் இத்தகைய சோதனை, அமெரிக்க விவசாய துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என முன்னர் டிரம்ப் கவலை தெரிவித்திருந்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



