ரஷ்யாவில் நிலநடுக்கம் தாக்கிய தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு - 6 கி.மீ. உயரம் எழுந்த புகை

காணொளிக் குறிப்பு, நிலநடுக்கம் தாக்கிய பகுதியில் பயங்கர எரிமலை வெடிப்பு
ரஷ்யாவில் நிலநடுக்கம் தாக்கிய தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு - 6 கி.மீ. உயரம் எழுந்த புகை

கிழக்கு ரஷ்யாவில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு க்ராஷென்னினிகவ் எரிமலை வெடித்தது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகவ் எரிமலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 6 கிலோமீட்டர் உயரத்துக்குச் சாம்பல் புகை எழுந்தது.

இது கடந்த வாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"நாங்கள் ஒரு தனித்துவமான நிகழ்வைப் பார்த்தோம். தும்ரோகியிலிருந்து திரும்பும் போது க்ராஷென்னினிகவ் எரிமலை வெடிப்பைப் பார்த்தோம்." என்கிறார் சுற்றுலா வழிகாட்டி ஆர்ட்டியம் ஷெல்டோவிட்ஸ்கி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு