காணொளி: ஸ்கூட்டரில் இந்தியாவை வலம் வரும் பெண்
காணொளி: ஸ்கூட்டரில் இந்தியாவை வலம் வரும் பெண்
பஞ்சாப் மாநிலம் கரார் பகுதியை சேர்ந்த ஜஸ்ப்ரீத் கவுர் என்ற பெண் தனது ஸ்கூட்டரிலேயே நாட்டை சுற்றி பயணம் மேற்கொள்கிறார். 46 வயதான அவர் பல மாநிலங்கள் கடந்து தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் வரை வந்து சென்றுள்ளார். இந்த பயணத்தில் 6000 கி.மீ தூரம் அவர் தனியே ஸ்கூட்டியில் பயணித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இது போன்ற பயணங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



