ஓட்டுநரே இல்லாமல் நிலத்தை உழுது கொடுக்கும் டிராக்டர்
ஓட்டுநரே இல்லாமல் நிலத்தை உழுது கொடுக்கும் டிராக்டர்
இது ஓட்டுநரே இல்லாத டிராக்டர். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் செயல்படுகிறது. லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தால் இந்த டிராக்டர் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த டிராக்டருக்கு நிலத்தை உழுவதற்கான கட்டளையை மட்டும் ஒருவர் வழங்கினால் போதுமானது.
பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் கூற்றுப்படி, வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் சிறு மாற்றங்களைச் செய்ததன் மூலம் இது தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதைத் தங்கள் டிராக்டர்களில் பொருத்த சுமார் 4 லட்ச ரூபாய் செலவாகும்.
விரிவாக காணொளியில்...
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



