காணொளி: பாம்புக்கு வாயோடு வாய் வைத்து சிபிஆர் சிகிச்சை அளித்த இளைஞர்

காணொளிக் குறிப்பு, பாம்புக்கு சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய இளைஞர்
காணொளி: பாம்புக்கு வாயோடு வாய் வைத்து சிபிஆர் சிகிச்சை அளித்த இளைஞர்

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள அம்தா கிராமத்தில் காயமடைந்த பாம்பு ஒன்றுக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கும் காட்சி இது.

அம்தா கிராமத்தின் வனப்பகுதியில் விவசாயிகள் வேலை செய்துகொண்டிருந்த போது, மின் கம்பத்தில் இருந்து பாம்பு ஒன்று விழுவதை கண்டுள்ளனர். இதன்பின், அவர்கள் அந்த கிராமத்தில் வனவிலங்குகளை மீட்கும் முகேஷ் வயட் என்பவரை அழைத்துள்ளனர்.

அது நஞ்சு இல்லாத ரேட் ஸ்நேக் எனும் பாம்பு வகையை சேர்ந்தது என்பதை அறிந்த முகேஷ், அதற்கு அரை மணிநேரம் சிபிஆர் எனப்படும் உயிர் காக்கும் சிகிச்சையை அளித்தார்.

பின்னர் அது மீண்டும் ஊர்ந்த நிலையில் வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய முகேஷ், கடந்த 10 ஆண்டுகளாக பாம்புகளை காப்பாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். அதற்காக தரம்பூர் பாம்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் முகேஷ் பயிற்சி எடுத்துள்ளார். பாம்பின் உயிரை காப்பாற்றும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு