உள்நாட்டுப் போரால் பரிதாப நிலையில் சூடான் தலைநகரம் – பிபிசி செய்தியாளர் நேரில் கண்ட காட்சி

காணொளிக் குறிப்பு, ஆப்பிரிக்கா
உள்நாட்டுப் போரால் பரிதாப நிலையில் சூடான் தலைநகரம் – பிபிசி செய்தியாளர் நேரில் கண்ட காட்சி

சூடானில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த கொடூரமான உள்நாட்டுப் போரால், அதன் தலைநகரமான காட்டூம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவின் துடிப்பான நகரமாக இருந்த காட்டூம் இப்போது கலையிழந்து, கவலைக்குரிய நிலையில் இருக்கிறது.

வறுமையும், பசியும் வாட்டும் சூழலிலும் அங்குள்ள மக்கள் ஈகைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். பிபிசி செய்தியாளர் பார்பரா ப்ளெட் அஷர் காட்டூம் நகரத்தின் நிலையைக் காண இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு சென்றிருந்தார். அதன் முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.