பெங்களூரு சாலையோரம் பாடிய எட் ஷீரன், தடுத்து நிறுத்திய காவலர் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
பெங்களூரு சாலையோரம் பாடிய எட் ஷீரன், தடுத்து நிறுத்திய காவலர் - என்ன நடந்தது?

இந்தியா வந்துள்ள பிரபல பிரிட்டிஷ் இசைக் கலைஞர் எட்ஷீரன் இன்று(பிப்ரவரி 9) பெங்களூருவில் உள்ள ஒரு சாலையில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாடினார்.

அவரது பிரபலமான Shape Of You பாடலை பாடும்போது காவலர் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.

அனுமதியின்றி பாடியதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

"அந்த இடத்தில் பாட அனுமதி இருந்தது. இது முன்பே திட்டமிடப்பட்டது. நாங்கள் அங்கு தற்செயலாக வரவில்லை" என எட் ஷீரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

அங்கு என்ன நடந்தது?

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)