காணொளி- திடீரென இடிந்து விழுந்த நெடுஞ்சாலை தடுப்புச்சுவர்
காணொளி- திடீரென இடிந்து விழுந்த நெடுஞ்சாலை தடுப்புச்சுவர்
கேரளாவில் நெடுஞ்சாலையில் ஒருபகுதி இடிந்துவிழுந்து வாகனங்கள் சிக்கியிருக்கும் காட்சி இது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே சித்தாட சந்திப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டு சுவர் வெள்ளியன்று (டிசம்பர் 5) உட்பக்கமாக இடிந்துவிழுந்தது.
இதனால் இணைப்புச்சாலையில் விரிசல் ஏற்பட்டு பள்ளி வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் சிக்கிக்கொண்டன. பின்னர் வாகனங்களில் இருந்த நபர்கள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



