‘ரஜினி பேச்சை பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது’, அமெரிக்கா செல்லும் முன் முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, 17 நாள் அரசுப் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்கா சென்றுள்ளார்
‘ரஜினி பேச்சை பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது’, அமெரிக்கா செல்லும் முன் முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?

புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மூத்த தலைவர்கள் குறித்து பேசிய கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க 17 நாள் அரசுப் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்கா கிளம்பினார். அதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறேன். புதிய தொழில் முதலீடுகள் தொடர்பான பணிகளை முடித்துக் கொண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை வர திட்டமிட்டு இருக்கிறேன்.” என்றார்.

அப்போது ரஜினி- துரைமுருகன் விவகாரம் குறித்த கேள்விக்கு, “அவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள். இந்த விவகாரத்தை துரைமுருகன் சொன்னதைப் போன்றே, நீங்கள் நகைச்சுவையாகதான் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா செல்லும் முன் முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன

பட மூலாதாரம், @mkstalin/X

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)