உணவு தேடி கோயிலுக்குள் நுழைந்த யானை
உணவு தேடி கோயிலுக்குள் நுழைந்த யானை
கோவை வெள்ளியங்கிரியில் உணவு தேடி ஒற்றைக் காட்டு யானை கோயிலுக்குள் திடீரென நுழைந்தது. இதனால் அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பயந்து ஓடினர்.
ஏற்கெனவே கோயிலுக்குள் காட்டு யானை நுழைந்த சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் வனத்துறையினர் கும்கி யானையை கொண்டு வந்து கண்காணித்து வந்தனர். கடந்த சில காலமாக வராமல் இருந்த காட்டு யானை தற்போது மீண்டும் கோயிலுக்குள் நுழைந்ததால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



