ரூ.200 கோடிக்கும் மேல் பறிமுதல்: 36 இயந்திரங்கள் எண்ணியும் முடியவில்லை - யார் இந்த காங்கிரஸ் எம்.பி.?
பீரோ முழுக்க கட்டு கட்டாக பணம்.... ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 200 கோடிக்கும் அதிகமான ரொக்கம்....
பணத்தை முழுமையாக எண்ணுவதற்கு முடியாத அளவுக்கு இந்தியாவை அதிர வைத்திருக்கிறது இந்த வருமான வரித்துறையின் சோதனை... எங்கே இது? என்ன நடக்கிறது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்....
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தீரஜ் சாஹூவுக்கு தொடர்புடைய, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள பல இடங்களில் வருமான வரித்துறையினர் டிசம்பர் 6ம் தேதி முதல் சோதனை நடத்தத் தொடங்கினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய்க்கு அதிகமான பணம் சிக்கியிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



