வன்முறை கும்பல்கள் ஒழிப்பு நடவடிக்கையை அறிவித்த ஈக்வடார் அரசு - என்ன நடக்கிறது?
ஈக்வடார் அரசு வன்முறை கும்பல்கள் ஒழிப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. தலி நகரில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறார்கள். மூன்று மாதங்களில் 16,000-க்கும் மேலானோரை கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் தொலைக்காட்சி நிறுவனத்தில் நுழைந்து நிகழ்ச்சியை நிறுத்தியது, ஈக்வடார் கும்பல் வன்முறையில் சிக்கியுள்ளதை உலகுக்குக் காட்டியது.
ஈக்வடாரில் மிகப்பெரிய வன்முறை கும்பல்களின் உறுப்பினர் எங்களிடம் பேச ஒப்புக்கொண்டார். உள்ளூர் கும்பல் ஒன்றுக்கு போதைப்பொருள் விற்பனையை தனது 15வது வயதில் அவர் தொடங்கினார்.
போதைப்பொருள் வணிகம் வளரத் தொடங்கியது அதிகளவு கோக்கைனை அவர் கடத்தத் தொடங்கினார். நான் வலியுறுத்திக் கேட்ட பின்பு மக்களை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

அதிகாரபூர்வமாக நாட்டின் கொலை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகமாகியுள்ளது. இது கொலம்பியா மற்றும் மெக்சிகோவை விட அதிகம்.
ஈக்வடாரின் மிகப்பெரிய துறைமுக நகரமான கியோக்கலில் கடலோர காவல் படை கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
ஈக்வடார் அதிகாரிகளுக்கு ஒரு சவால் உள்ளது. தொலைக்காட்சி நிலைய தாக்குதல் விசாரணையின் தலைவர் உட்பட கடந்த 2 ஆண்டுகளில் ஆறு அரசு வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தன்னுடன் பணியாற்றியவரும் நண்பருமானவரை இழந்த வருத்தத்தில் உள்ள மிச்செல் லோனா, தன் உயிர் குறித்த அச்சத்தில் உள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



