பிரதமர் மோதியுடன் ஒரே மேடையில் தோன்ற கூட்டணிக் கட்சி முதலமைச்சர் மறுப்பு
பிரதமர் மோதியுடன் ஒரே மேடையில் தோன்ற கூட்டணிக் கட்சி முதலமைச்சர் மறுப்பு
பிரதமர் நரேந்திர மோதி மிசோரம் வந்து தேர்தல் பேரணியில் பேசினால், அவருடன் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று மிசோரம் முதல்வரும், மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய ஜோரம்தங்கா, மத்திய அரசு விரும்பினால், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது கடினம் அல்ல. மிசோ தேசிய முன்னணி வட கிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாகவும், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் உள்ளது.
மிசோரமில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோதியுடன் மேடையில் பங்கேற்பது சாத்தியமா என்ற கேள்விக்கு, பிரதமருடன் மேடைக்கு வர மாட்டேன் என்று ஜோரம்தங்கா தெளிவாகக் கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



