80 வயதில் நீச்சல் கலையில் பதக்கங்களை குவிக்கும் பாட்டி

காணொளிக் குறிப்பு, 80 வயதில் நீச்சல் கலையில் பதக்கங்களை குவிக்கும் பாட்டி - சாதித்தது எப்படி?
80 வயதில் நீச்சல் கலையில் பதக்கங்களை குவிக்கும் பாட்டி

இவர் 80 வயதான பகுலாபென். ‘வயது வெறும் எண்தான்’ என்பதற்கான உதாரணமாகத் திகழ்கிறார். 58 வயதில்தான் அவர் நீச்சல் கலையைக் கற்றுக்கொண்டார். தற்போது 80 வயதாகும் இவர் இன்னும் நீச்சலடிக்கிறார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பதக்கங்கள், பரிசுகளை வென்றுள்ளார் இவர். சில கொந்தளிப்பானபெருங்கடல்களிலும் அவர் நீச்சலடித்துள்ளார்.

பகுலா பென் 400 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கிறார். கின்னஸ் உலக சாதனையில் தன் பெயர் இடம்பெற வேண்டும் என்பதுதான் அவருடைய பெரும் விருப்பமாக இருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)