தகுதி நீக்கம் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்தை முடக்குமா?

காணொளிக் குறிப்பு, தகுதி நீக்கம் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்தை முடக்குமா?
தகுதி நீக்கம் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்தை முடக்குமா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவரது எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது அவரது அரசியல் வாழ்வில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும்?

இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. இந்த நடவடிக்கை ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்தை முடக்குமா?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறித்து, அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. ராகுல் காந்திக்கு பிணையும் வழங்கப்பட்டது.

ராகுல் காந்தி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: